தாரா பலன்
தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். ஒரு நல்ல காரியம் செய்கின்ற நாளில் அந்த காரியம் வெற்றி பெறுமா ? இல்லையா என நட்சத்திர பலம் உள்ளதா என்று பார்ப்பதே தாரா பலம் அல்லது பலன் என்று அர்த்தம்.
தாரா பலன்கள் எப்படி பார்ப்பது
ஒரு செயல் செய்பவரின் நட்சத்திரத்தில் இருந்து செயல் செய்யும் நாள் நட்சத்திரம் வரை எண்ண வேண்டும். அது 1,2,3,4,5,6,7,8,9 என்ற கணக்கில் வரும். ஒன்பதுக்கு மேல் வந்தால் அதை ஒன்பதால் வகுத்து மீதியை கணக்கில் கொள்ள வேண்டும். இதில்
தாரா பலன்கள்
- ஜென்ம தாரை — மனக்குழப்பம்
- சம்பத்து தாரை — செல்வம் பெருகும்
- விபத்து தாரை —விபத்து தரும்
- சேமதாரை —நன்மை பெருகும்
- பிரத்யக்கு தாரை — செயல் தள்ளி போகும்
- சாதக தாரை — செயலை சரியாக முடிக்கும்
- வதை தாரை — கெடு பலன் தரும்
- மைத்திர தாரை - நன்மை தரும்
- பரம மைத்திர தாரை -வெற்றி தரும்