மகாபுருஷயோகம் எனப்படுவது என்ன?
நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேது மற்றும் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தவிர்த்து, பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கும் யோகங்களே பஞ்ச மகா புருஷயோகங்கள் என அழைக்கப்படுகின்றன.
குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்குக் கேந்திரங்களான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் அமர்ந்து ஆட்சியாகவோ உச்சபலமாகவோ இருக்கும் போது இந்த யோகங்கள் உருவாகின்றன.
- குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த இடம் லக்கினத்தில் இருந்து 1,4,7,10 கேந்திரமாக இருந்தால் ஹம்ச யோகம்
- புதன் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த இடம் லக்கினத்தில் இருந்து 1,4,7,10 கேந்திரமாக இருந்தால் பத்ர யோகம்
- சனி பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த இடம் லக்கினத்தில் இருந்து 1,4,7,10 கேந்திரமாக இருந்தால் ஸசா யோகம்
- சுக்கிர பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த இடம் லக்கினத்தில் இருந்து 1,4,7,10 கேந்திரமாக இருந்தால் மாளவிய யோகம்
- செவ்வாய் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த இடம் லக்கினத்தில் இருந்து 1,4,7,10 கேந்திரமாக இருந்தால் ருச்சக யோகம்