ஹோரை
ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் கிரகங்கள். ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட நேரம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே ஹோரை நேரங்கள் வரும்.
ஞாயிற்றுக் கிழமையை எடுத்துக் கொண்டால் அந்த நாளில் சூரிய ஹோரை காலை 6 - 7 என அந்த நாள் ஆரம்பமாகும்.
இதே போல் திங்கட் கிழமையில் சந்திர ஹோரையும், செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையும், புதனன்று புதன் ஹோரை, வியாழனன்று குரு ஹோரை, வெள்ளியன்று சுக்கிர ஹோரை, சனியன்று சனி ஹோரை என ஒவ்வொரு நாளுக்குரிய ஹோரையுடன் ஆரம்பமாகும்.