சந்திராஷ்டமம் என்பது ஜோதிட வானியல் சாஸ்திரத்தின் படி : சந்திரன் மனத்தை கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் கிரகம். சந்திராஷ்டமம் தினத்திற்கு முந்தைய நாளும், பிந்தைய நாளும் சேர்த்து ஆக மொத்தம் மூன்று நாட்களும் கவனமாக பேச வேண்டும்.
சந்திராஷ்டம தினங்களில் சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது. சந்திராஷ்டமம் தினங்களில் சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யக் கூடாது. எப்படி ராசிபலன் முக்கியமாக கருதி பார்க்கிறோமோ அதைவிட 10 மடங்கு முக்கியமாக கருதி சந்திராஷ்டமத்தில் கவனம் செலுத்த வேண்டும்.